நிதிரீதியாக திட்டமிடுபவர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் பணக்காரர்களுக்கு மட்டும் தானா?

நான் என்னுடன் முன்னாள் பணிபுரிந்த சக ஊழியரை சந்தித்த போது, நீங்கள் ஏதேனும் நிதி ஆலோசகரின் உதவியை நாடியுள்ளீர்களா என்று கேட்டேன்? அதற்கு அவர், இது போன்ற உதவியை நாட நான் ஒன்றும் பணக்காரர் இல்லை. இந்த உதவியை பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்கள் தான் நாடிச்செல்வார்கள் என்று கூறினார். ஆனால் அவரோ ஆண்டிற்கு 10 லட்சம் வரை சம்பாதிக்கிறார், இருப்பினும் இவர் நிதிமுதலீட்டு ஆலோசனை எல்லாம் மூத்த நிர்வாகிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டும் தான் என்ற கருத்தை தெருவித்தார். இப்படி எல்லா மக்களும் தவறாகவே நினைக்கிறார்கள்.

இரு வாரங்களுக்கு முன் என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர் என்னை தொலைபேசியில் அணுகி, “எனது பாஸ் என்னிடம் முதலீடு செய்ய ஒரு நிதி ஆலோசகரை அணுகவேண்டும் என்று கூறினார். ஆகையால் உங்களை நான் அறிமுகம் செய்து வைக்கிறேன், உங்களது தொடர்பு முகவரியை பாஸிடம் கொடுக்கலாமா என்று கேட்டார்?”, அதற்கு நான் சரி என்று கூறி பின் “நீங்கள் ஏதேனும் நிதி ஆலோசகரை அணுகியுள்ளீர்களா, உங்களுக்கு ஆலோசனை தேவையில்லையா என்று கேட்டேன்?”, அதற்கு அவர் அளித்த பதில் என்னை திகைப்படையச்செய்தது. அவர் “ஐயா, அது உங்களை போன்றவர்களுக்கும் (நான் முன்பு காக்னிசன்ட் ஐடி நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்தேன்) மற்றும் என் பாஸுக்கும் தான் உகந்தது என்றார் (அவரது பாஸ் அதே காக்னிசன்ட் ஐடி நிறுவனத்தில் தற்பொழுது இயக்குனராக பணிபுரிகிறார்)”.

இப்பொழுது இந்த வலைப்பதிவின் நோக்கத்தை உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நான் எனக்கு தோன்றிய சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

  1. சாதாரண மக்கள் ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை நாடாமல் அவர்களே மருத்துவம் சார்ந்த பிரச்சனையை பார்த்துக்கொள்ள முடியுமா?
  2. சாதாரண மக்கள் ஏதேனும் சட்ட சிக்கல் வரும்போது ஏதேனும் ஒரு வழக்கறிஞரின் உதவியை நாடாமல் அவர்களே நீதிமன்றம் சென்று வாதிட முடியுமா?

 

மேலே கூறப்பட்ட இரண்டு கேள்விகளின் பதில்களும் உங்களுக்கு தெரிந்தது தான், அப்படி இருக்கையில் நிதிமுதலீட்டு ஆலோசனையாளர்களையும், திட்டமிடுபவர்களையும் அணுகாமல் இருப்பது ஏன்?

முதலீட்டு வல்லுனர்களையும், நிதி ஆலோசகர்களையும் அணுகாமல் இருக்க மக்கள் கூறும் சில கூற்றை இப்பொழுது முன்வைக்கிறேன்.

  1. நான் ஒன்றும் பணக்காரன் இல்லை, நான் நிறைய சம்பாதிக்கவில்லை.
  2. நான் எனக்கு தேவையான அளவு பணம் ஈட்டும்போது, அதை முதலீடு பண்ணத் தெரியாதா.
  3. நிதித்துறை வல்லுனரிடம் ஆலோசனை பெறுவதற்கு அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும்

 

சில தனியார் பள்ளிகள், பள்ளியில் பத்தாம் வகுப்பில் 500 க்கு 450 க்கு மேல் எடுக்கும் மாணவர்களை மட்டும் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து அவர்களை மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொறியியல் கல்லூரியிலோ சேர்க்கின்றன. பல ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி என்று பெருமையும் படுகின்றன.

புத்திசாலி மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து 100% தேர்ச்சி பெற்றுள்ளோம், இந்த பள்ளியில் படித்த மாணவர்களை நாங்கள் மருத்துவராகவும், பொறியியலாளராகவும் மற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) ஆக்கியுள்ளோம் என்று புள்ளி விவரம் காண்பித்து விளம்பரம் செய்கிறார்கள். இது பெரிய விசயம் இல்லை.

ஒரு அரசு பள்ளி, அதில் படிக்கும் மாணவர்களை ஒரு மருத்துவராகவும், பொறியியலாளராகவும் மற்றும் ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்)  உருவாக்கினால் அதுவே பெரிய சாதனையாகும்.

இதேபோல், ஒரு நிதிமுதலீட்டாளர் 10 கோடி ரூபாய் வைத்துள்ள ஒரு பணக்காரரின் செல்வத்தை 12 கோடியாகவோ அல்லது 100 கோடி ரூபாய் வைத்துள்ள ஒரு பணக்காரரின் செல்வத்தை 125 கோடியாகவோ பெருக்குவது ஒரு பெரிய விசயம் இல்லை. சாதாரண மக்களின் ஒரு சில 1000 ரூபாயை பன்மடங்கு பெருக்குவதுதான் பெரிய விசயம். அதில் ஏற்படும் திருப்தியும் அலாதி.

செல்வந்தர்களுக்கு ஆலோசனை கூறி அவர்களின் செல்வத்தை மேன்மேலும் பெருக்குவது தவறு என்று நான் கூறவில்லை. சாதாரண மக்களின் செல்வத்தை பெருக்குவதுதானால் ஏற்படும் தாக்கம் அதிகமானது என்றே கூறுகிறேன்.

  • பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் லாபம் மற்ற எல்லா நீண்டகால முதலீடுகளைவிட (வங்கி, தங்கம், நிலம்) அதிகம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை. அப்படி இருக்க பங்கு சந்தையில் 4% க்கு குறைவாகவே இந்தியர்கள் முதலீடு செய்துள்ளது ஏன்?
  • சென்ற வருடம் அரசு சார்ந்த நிறுவனங்கள் 9% வரை வட்டிவிகிதம் தரும் வரி விலக்கு பத்திரங்களை வெளியிட்டன. அது நல்ல முதலீடு; ஆனால் அதில் எத்தனை சாதாரண மக்கள் முதலீடு செய்து பயனடைந்தார்கள்?
  • இன்றைய தேதியில் பணவீக்கத்தின் அளவு 8%, வங்கி முதலீட்டின் மூலம் இன்றைய பணவீக்கத்தைவிட அதிக லாபம் சம்பாதிப்பது என்பது இயலாத காரியம் ஆகும் (வங்கி முதலீட்டின் மூலம் நாம் பெறும் வட்டிக்கு வரிசெலுத்த வேண்டும் என்பதை கணக்கில் கொள்ளவேண்டும்). அப்படி இருக்க 80 லட்சம் கோடி ரூபாய் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது ஏன்?

 

இந்த கேள்விகளுக்கு பதில் சுலபமானது – அறியாமை

எல்லா தரப்பட்ட மக்களும், ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரையோ, சட்ட சிக்கல் வரும் போது ஏதேனும் ஒரு வழக்கறிஞரின் உதவியையோ நாடி செல்கிறார்கள். அதேமாதிரி நிதி மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு நிதி ஆலோசகரை அணுகுவது உசிதமாகும். நிதி ஆலோசகரை அணுகும் முன் எவ்வளவு ஆலோசனைக் கட்டணம் பெறப்படும் என்பதை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

<Blog # PenguWIN 1012 – நிதிரீதியாக திட்டமிடுபவர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் பணக்காரர்களுக்கு மட்டும் தானா?>